ஒளிப்பதிவு வரைவு மசோதாவுக்கு நடிகர் சூர்யா எதிர்ப்பு

சட்டம் என்பது கருத்து சுதந்திரத்தைக் காப்பதற்காக... அதன் குரல்வளையை நெறிப்பதற்காக அல்ல...
ஒளிப்பதிவு வரைவு மசோதாவுக்கு நடிகர் சூர்யா எதிர்ப்பு

ஒளிப்பதிவு வரைவு மசோதாவுக்கு நடிகர் சூர்யா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

ஒளிப்பதிவு திருத்த மசோதா 2019, பிப்ரவரி 12-ஆம் தேதி மாநிலங்களவை அறிமுகப்படுத்தப்பட்டு பின்னா் அது நிலைக் குழுவிற்கு அனுப்பப்பட்டது. நிலைக்குழு கடந்தாண்டு மாா்ச் மாதம் அறிக்கையை சமா்ப்பித்தது. தற்போது மீண்டும் 2021-இல் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. இந்தத் திருத்தச் சட்டப்படி ஒரு முறை தணிக்கைக்கு உள்ளான திரைப்படங்கள் மீண்டும் தணிக்கை செய்ய கோர முடியும். மேலும், திரைப்பட திருட்டுகளுக்கு கடுமையான சிறை தண்டனை, அபராதம் ஆகியவை விதிக்கப்பட உள்ளன. இந்த மசோதா குறித்து கடந்த சில நாள்களாக திரைப்படத் துறையினா் கருத்துகளை தெரிவித்து வருகின்றனா்.

இந்நிலையில் ஒளிப்பதிவு வரைவு மசோதாவுக்கு நடிகர் சூர்யா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ட்விட்டரில் அவர் கூறியதாவது:

சட்டம் என்பது கருத்து சுதந்திரத்தைக் காப்பதற்காக... அதன் குரல்வளையை நெரிப்பதற்காக அல்ல... இன்றுதான் கடைசி நாள். உங்கள் ஆட்சேபனையைத் தெரிவியுங்கள் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com