
இலங்கைத் தமிழனாக விஜய் சேதுபதி நடித்துள்ள ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ திரைப்பட டீசர் வியாழனன்று வெளியாகியுள்ளது.
சென்னை: இலங்கைத் தமிழனாக விஜய் சேதுபதி நடித்துள்ள ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ திரைப்பட டீசர் வியாழனன்று வெளியாகியுள்ளது.
எஸ்.பி ஜனநாதனின் உதவி இயக்குநராக பணிபுரிந்த வெங்கட கிருஷ்ண ரோகாந்த் ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ படத்தை இயக்கியுள்ளார்.
இந்தப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இயக்குநர்கள் மோகன் ராஜா, மகிழ் திருமேனி, கரு பழனியப்பன் நடிகைகள் மேகா ஆகாஷ், ரித்விகா, கனிகா மற்றும் விவேக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
வெளிநாடு வாழ் தமிழர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து படம் பேசுகிறது என்பதை உணர்த்தும் வகையில் டீசர் அமைந்துள்ளது.