
படம் - twitter.com/hungama2film
ஏழு வருடங்களுக்குப் பிறகு பிரியதர்ஷன் இயக்கியுள்ள ஹிந்திப் படம் - ஹங்கமா 2.
பரேஷ் ராவல், ஷில்பா ஷெட்டி, மீஸான், பிரணிதா போன்றோர் நடித்துள்ளார்கள். 2003-ல் வெளிவந்த ஹங்கமா படத்தின் 2-ம் பாகம் இது. எனினும் அப்படக் கதையின் தொடர்ச்சியாக இருக்காது என பிரியதர்ஷன் கூறியுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் ஹங்கமா 2 படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றது.
ஹங்கமா 2 படம் ஆகஸ்ட் 14 அன்று திரையரங்குகளில் வெளிவருவதாக இருந்தது. எனினும் கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஹங்கமா 2 படம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக படத்தயாரிப்பு நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
எந்த ஓடிடியில், எப்போது படம் வெளியாகும் என்கிற விவரங்கள் விரைவில் வெளியாகவுள்ளன.