
படம் - twitter.com/GitanjaliSelva
புதுப்பேட்டை படம் வெளிவந்து 15 ஆண்டுகள் ஆகிவிட்டது.
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ், சோனியா அகர்வால், சிநேகா நடித்த படம் - புதுப்பேட்டை. இசை -யுவன் சங்கர் ராஜா.
படம் வெளிவந்து 15 ஆண்டுகள் வெளியானதையொட்டி சமூகவலைத்தளங்களில் பலரும் பதிவுகள் எழுதியுள்ளார்கள். செல்வராகவனின் மனைவியும் இயக்குநருமான கீதாஞ்சலி, புதுப்பேட்டை படத்தைப் பார்த்த அனுபவம் பற்றி ட்விட்டரில் கூறியதாவது:
எனக்குக் கல்லூரி இருந்ததால் முதல் நாள் முதல் காட்சியைப் பார்க்க முடியவில்லை. சில நாள்கள் கழித்து நண்பர்களுடன் இணைந்து படத்தைப் பார்த்த நினைவு இருக்கிறது. படத்தைப் பார்த்து அசந்துவிட்டேன். திரைப்படம் பற்றிய முதுகலைப் பட்டப் படிப்புக்காக இங்கிலாந்தின் செஃப்பீல்டுக்குச் சென்றேன். அங்கு, புதுப்பேட்டை படம் பற்றிய ஆய்வறிக்கையை வழங்கினேன் என்றார்.
பிரபல இயக்குநர் செல்வராகவன், 2011-ல் கீதாஞ்சலியைத் திருமணம் செய்தார். 2012-ல் லீலாவதி என்கிற மகளும் 2013-ல் ஓம்கார் என்கிற மகனும் இந்த வருடம் ரிஷிகேஷ் என்கிற மகனும் பிறந்தார்கள்.