
நாளை(நவ.2) வெளியாகிறது ‘ஜெய் பீம்’
நடிகர் சூர்யா தயாரித்து நடித்திருக்கும் ’ஜெய் பீம்’ திரைப்படம் நாளை(நவ.2) அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகிறது.
இதையும் படிக்க | வெல்லுமா சூர்யாவின் 'ஜெய் பீம்'? - திரைப்பட விமர்சனம்
நடிகர் சூர்யா தன்னுடைய 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் நான்கு படங்களைத் தயாரித்து அனைத்தையும் அமேசான் வெளியீடாக கொண்டு வரும் முயற்சியில் இருக்கிறார். அதில் ’இராமே ஆண்டாளும் இராவணே ஆண்டாளும்’ ‘உடன் பிறப்பே’ ஆகிய இரண்டு படங்கள் வெளிவந்ததைத் தொடர்ந்து ’ஜெய் பீம்’ திரைப்படம் நாளை நவம்பர் 2-ஆம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் வெளியாக உள்ளது.
ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இப்படம் தமிழ் , மலையாளம் , கன்னடம் , தெலுங்கு , ஹிந்தி ஆகிய 5 மொழிகள் வெளியாகிறது.
’ஜெய் பீம்’ படத்தை ஞானவேல் இயக்க, நடிகர் சூர்யா வழக்கறிஞர் தோற்றத்தில் நடித்துள்ளார். ஷான் ரோல்டன் இந்தப் படத்துக்கு இசையமைக்க, எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
Experience the fight for justice in 5 languages!
— amazon prime video IN (@PrimeVideoIN) November 1, 2021
Show us your love with #JaiBhimOnPrime and lucky fans stand a chance to be part of a virtual fan meet event today with @Suriya_offl!#Jyotika @tjgnan @prakashraaj @RSeanRoldan @srkathiir @KKadhirr_artdir @philoedit pic.twitter.com/XZp2AtqEh5