
சமீபத்தில் கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பால் காலமானார். இளம் வயதில் அவர் மரமடைந்தது அவரது ரசிகர்களை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்திய திரையுலகினரையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பல்வேறு மொழி பிரபலங்களும் அவருக்கு நேரில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில் சில நாட்களுக்கு முன் நடிகர் சிவகார்த்திகேயன் புனித் ராஜ்குமாரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரது சகோதரர் சிவ ராஜ்குமாரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
இதையும் படிக்க | போஸ்டரால் உருவான சர்ச்சை: தயாரிப்பாளர் சங்கத்துக்கு கடிதம் எழுதிய கௌதம் மேனன்
இந்த நிலையில் நடிகர் சூர்யா புனித் ராஜ்குமாரின் நினைவிடத்தில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். அப்போது புனித் ராஜ்குமாரின் சகோதரர் சிவ ராஜ்குமார் உடன் இருந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சூர்யா, தனது குடும்பத்துக்கும், நடிகர் ராஜ்குமார் குடும்பத்துக்கும் நல்ல உறவு இருந்ததாகவும் புனித் ராஜ்குமாரின் மறைவு செய்தியை கேட்டு தங்கள் குடும்பத்தினர் மிகுந்த துயருற்றறதாகவும் தெரிவித்தார். மேலும் நம் மனதில் என்றும் புனித் ராஜ்குமார் இருப்பார் என்றும் அவர் கூறினார்.
. Tamil actor @Suriya_offl visited #Kanteeravastudio today and paid homage to #PuneethRajkumar pic.twitter.com/Kp4V5mk0N8
— A Sharadhaa / ಎ ಶಾರದಾ (@sharadasrinidhi) November 5, 2021