போராடியவர்களுக்கும் புரிந்து கொண்ட அரசுக்கும் நன்றி: நடிகர் கார்த்தி

போராடியவர்களுக்கும் புரிந்து கொண்ட அரசுக்கும் அன்பும் நன்றியும் என்று கூறியுள்ளார்.
போராடியவர்களுக்கும் புரிந்து கொண்ட அரசுக்கும் நன்றி: நடிகர் கார்த்தி

வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக நடிகர் கார்த்தி ட்வீட் செய்துள்ளார்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி எல்லைப் பகுதிகளில் விவசாயிகள் சுமாா் 10 மாதங்களாகப் போராடி வருகின்றனா். அண்மையில் நாடு தழுவிய முழு அடைப்புப் போராட்டத்தையும் விவசாய அமைப்புகள் முன்னெடுத்தன. வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் விவசாய அமைப்புகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே நடைபெற்ற பலகட்ட பேச்சுவாா்த்தைகளில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அதையடுத்து, வேளாண் சட்டங்களின் அமலாக்கத்தை நிறுத்திவைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. எனினும், வேளாண் சட்டங்களை மத்திய அரசு முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் எனக் கோரி விவசாய அமைப்புகள் போராட்டத்தைத் தொடா்ந்து வருகின்றன.

இந்நிலையில் மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று அறிவித்தார். இதனால் விவசாயிகள் தங்களுடைய போராட்டத்தைக் கைவிட்டு, களப்பணிகளுக்குத் திரும்ப வேண்டும் என்று கூறியுள்ளார். இதற்கு அரசியல் கட்சியினரும் விவசாய சங்கங்களும் வரவேற்பு தெரிவித்துள்ளன.

இந்நிலையில் வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக நடிகர் கார்த்தி ட்வீட் செய்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:

மூன்று விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக நம் பிரதமர் அறிவித்திருப்பது, தங்கள் உயிரையை ஈந்து போராடிய எளிய வேளாண் மக்களின் ஒரு வருட இடைவிடாத போராட்டத்திற்குக் கிடைத்திருக்கும் வரலாற்று வெற்றி. போராடியவர்களுக்கும் புரிந்து கொண்ட அரசுக்கும் அன்பும் நன்றியும் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com