ஏப்ரல் 14 அன்று மோதும் மூன்று பெரிய படங்கள்: அறிவிப்பு

இந்திய அளவில் ரசிகர்கள் எதிர்பார்க்கும் கேஜிஎஃப் 2, லால் சிங் சத்தா, சலார் ஆகிய மூன்று படங்களும்...
ஏப்ரல் 14 அன்று மோதும் மூன்று பெரிய படங்கள்: அறிவிப்பு


இந்திய அளவில் ரசிகர்கள் எதிர்பார்க்கும் கேஜிஎஃப் 2, லால் சிங் சத்தா, சலார் ஆகிய மூன்று படங்களும் 2022 ஏப்ரல் 14 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளன.

யாஷ் நடிப்பில் 2018-ல் வெளியான கேஜிஎஃப் என்கிற கன்னடப் படம் இந்திய அளவில் கவனம் பெற்றது. மற்ற மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியானது. பிரஷாந்த் நீல் இயக்கியிருந்தார். கேஜிஎஃப் படத்தின் 2-ம் பாகம் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. யாஷ், சஞ்சய் தத், ரவீனா டாண்டன், பிரகாஷ் ராஜ் போன்றோர் நடித்துள்ளார்கள். 

கேஜிஎஃப் 2 படம் திரையரங்குகளில் ஜூலை 16 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கரோனா அச்சுறுத்தல் காரணமாக இதன் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. கன்னடம், தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளிவரவுள்ளது. இப்படத்தின் தமிழ்நாட்டு வெளியீட்டு உரிமையை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

கேஜிஎஃப் இயக்குநர் பிரஷாந்த் நீலுடன் இணைந்துள்ளார் பிரபல நடிகர் பிரபாஸ். பிரபாஸ் - பிரஷாந்த் நீல் இணையும் படத்துக்கு சலார் எனப் பெயரிடப்பட்டுள்ளது. கதாநாயகியாக ஷ்ருதி ஹாசன் நடிக்கிறார். பாகுபலி 2, சாஹோ படங்களுக்கு அடுத்து பிரபாஸ் நடிக்கும் அனைத்து படங்களும் ஹிந்தியிலும் வெளியாகும் விதத்தில் உருவாக்கப்பட்டு வருகின்றன.

தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான் படத்துக்குப் பிறகு ஆமிர் கான் நடிக்கும் படம் - லால் சிங் சத்தா. ஆறு ஆஸ்கர் விருதுகளை வென்ற ஹாலிவுட் படமான ஃபாரஸ்ட் கம்பின் ரீமேக் இது. ஆமிர் கானின் ஜோடியாக கரீனா கபூர் நடிக்கிறார். இருவரும் இதற்கு முன்பு த்ரீ இடியட்ஸ், தலாஸ் ஆகிய படங்களில் ஜோடியாக நடித்துள்ளார். சீக்ரெட் சூப்பர்ஸ்டார் படத்தை இயக்கிய அத்வைத் சந்தன் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகியுள்ளார் பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா.

*

கேஜிஎஃப், சலார் ஆகிய இரு படங்களும் 2022 ஏப்ரல் 14 அன்று வெளியாகும் என முன்பே அறிவிக்கப்பட்டுவிட்டன. இந்நிலையில் ஆமிர் கானின் லால் சிங் சத்தா படமும் 2022, ஏப்ரல் 14 அன்று வெளியாகும் எனத் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்திய அளவில் ஆயிரக்கணக்கான திரையரங்குகளில் வெளியாகவுள்ள மூன்று படங்களும் ஒரே நாளில் மோதவுள்ளன. இதனால் ரசிகர்களுக்கு ஆச்சர்யம் ஏற்பட்டுள்ளது. எனினும் திரையரங்குகள் பற்றாக்குறை காரணமாக மூன்றில் ஒரு படம் வேறொரு தேதியில் வெளியாகவும் வாய்ப்புள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது. எப்படியோ அடுத்த ஏப்ரல் 14 சினிமா ரசிகர்களுக்குக் கொண்டாட்டமான ஒரு நாளாக இருக்கப் போகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com