
எனிமி படத்தில் இடம்பெற்ற தம் தம் பாடலின் விடியோ வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது.
அரிமா நம்பி, இருமுகன், நோட்டா படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர், அடுத்ததாக விஷால் - ஆர்யா நடித்த எனிமி படத்தை இயக்கினார். இசை - தமன், தயாரிப்பு - மினி ஸ்டூடியோஸ். மம்தா மோகன்தாஸ், மிருணாளினி ரவி, கருணாகரன் போன்றோரும் எனிமி படத்தில் நடித்துள்ளார்கள். கடந்த தீபாவளிக்கு இப்படம் வெளியானது.
எனிமி படத்தில் இடம்பெற்ற தம் தம் பாடலின் விடியோ சமீபத்தில் யூடியூப் தளத்தில் வெளியானது. கேட்பதற்கும் மட்டுமல்லாமல் பார்க்கவும் பாடல் அம்சமாக உள்ளதால் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
இரு மாதங்களுக்கு முன்பு இப்பாடலின் லிரிக் விடியோ வெளியாகி இதுவரை 10 மில்லியன் (1 கோடி) பார்வைகளைப் பெற்றுள்ளது. இந்நிலையில் கடந்த 4 நாள்களுக்கு முன்பு வெளியான இப்பாடலின் விடியோ, அதற்குள் 7 மில்லியன் (70 லட்சம்) பார்வைகளைப் பெற்றுள்ளது. தமன் இசையில் விவேக் எழுதிய இப்பாடலை ஸ்ரீவர்தினி, அதிதி, சத்யா யாமினி, ரோஷினி & தேஜஸ்வினி ஆகியோர் பாடியுள்ளார்கள். நடனம் - பிருந்தா. ஒளிப்பதிவு - ஆர்.டி. ராஜசேகர். பாடலின் இனிமை, மிருணாளினியின் அழகான நடனத்துடன் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமுமாக இப்பாடல் படமாக்கப்பட்டுள்ளதால் இதன் விடியோ ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. மேலும், சில வாரங்களுக்கு முன்பு பேர் வைச்சாலும் பாடலின் புதிய வடிவத்துக்கு ஆட்டம் போட்டு அதன் விடியோவை வெளியிட்ட இளைஞர்கள், இப்போது தம் தம் பாடலுக்கு நடனமாடி அதன் விடியோவைச் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.