
கோப்புப்படம்
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள கமல்ஹாசனின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசனுக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதாக கம்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் ட்விட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க | நடிகர் கமல்ஹாசனுக்கு கரோனா பாதிப்பு!
இந்த நிலையில், கமல்ஹாசனின் உடல்நிலை குறித்து அவர் அனுமதிக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும், அவர் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னமும் நோய்ப் பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என கமல்ஹாசன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.