
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வராம் வைல்டு கார்டு மூலம் யூடியூப் பிரபலம் அபிஷேக் மீண்டும் உள்ளே வந்தார். இதனையடுத்து பல்வேறு சுவாரசியமான சுற்றுகள் பிக்பாஸ் வீட்டில் அரங்கேறி வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக தற்போது கனா காணும் காலங்கள் சுற்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி போட்டியாளர்கள் அனைவரும் பள்ளி குழந்தைகளாக மாறியுள்ளனர். முதல்வராக சிபியும் ஆசிரியர்களாக ராஜு மற்றும் அபிஷேக் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
இதையும் படிக்க | நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா மீது வழக்குப்பதிவு
இந்த நிலையில் தற்போது வெளியான ப்ரமோவில் புதிய சுற்று குறித்து ராஜு விளக்குகிறார். அப்போது பாவனி அருகில் ஒருவர் அமர்ந்திருக்கிறார். அவர் வேறு யாரும் இல்லை. தொலைகாட்சி நிகழ்ச்சிகளுக்கு நடனம் அமைக்கும் அமீர் என்று தெரியவந்துள்ளது. இதுகுறித்த விவரங்கள் இன்றைய நிகழ்ச்சியில் தெரியவரும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.