
நடிகர் சிம்பு கதாநயாகனாக நடித்து, வெங்கட் பிரபு இயக்கியுள்ள 'மாநாடு' திரைப்படம் இரண்டு நாட்களில் தமிழக அளவில் ரூ.14 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார்.
விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற இந்தப் படம் ரசிகர்களையும் கவர்ந்துள்ளதே படத்தின் வசூல் அதிகரித்திருப்பதற்கு காரணமாக கூறப்படுகிறது. நடிகர் சிம்புவின் திரையுலக வாழ்வில் இந்தப் படம் திருப்புமுனையாக அமைந்துள்ளது.
இதையும் படிக்க | நடிகர் அஜித்தின் 'தல 61': உடைந்த கூட்டணி: வருத்தத்தில் ரசிகர்கள்: என்ன நடந்தது?
இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்புக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க, மனோஜ் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், வாகை சந்திரசேகர், ஒய்.ஜி.மகேந்திரன், கருணாகரன், பிரேம்ஜி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.