வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு மற்றும் எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடித்த மாநாடு திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப் படம் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இந்தப் படத்துக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மாநாடு படம் தொடர்பாக இயக்குநர் வெங்கட் பிரபு வுக்கு போன் செய்த நடிகர் ரஜினிகாந்த், வெங்கட் பிரபு மற்றும் சிம்பு ஆகியோரை வெகுவாக பாராட்டினாராம். இதனை வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
'மாநாடு' படத்தில் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையும், பிரவீன் கே.எல்லின் படத்தொகுப்பும் விமர்சகர்களால் பாராட்டப்பட்டு வருகின்றன. இந்தப் படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஏ.சந்திரசேகர், ஒய்.ஜி.மகேந்திரன், வாகை சந்திரசேகர், பிரேம்ஜி, கருணாகரன், மனோஜ் பாரதிராஜா, ஸ்டண்ட் சில்வா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். சுரேஷ் காமாட்சி இந்தப் படத்தை தனது வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பாக இந்தப் படத்தை தயாரித்துள்ளார்.
#Thalaivar @rajinikanth called and wished!!!
Me & STR
And that’s the tweet