
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடித்துள்ள மாநாடு திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. மேலும் விமர்சகர்கள் மத்தியில் பாராட்டு குவிந்து வருகிறது.
இந்தப் படத்துக்கு யுவன் இசையமைக்க, ரிச்சர்டு எம்.நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி ப்ரியதர்ஷன் நடிக்க, எஸ்.ஏ.சந்திரசேகர், ஒய்.ஜி.மகேந்திரன், வாகை சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி, உதயா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இதையும் படிக்க | புதிதாக ஒளிபரப்பாகவிருக்கும் 'வள்ளித் திருமணம்' தொடரின் நாயகி யார் தெரியுமா?
இந்தப் படத்தில் இருந்து மெகரசைலா வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை மதன் கார்கி எழுதிய இந்தப் பாடலை யுவன், பவதாரணி இணைந்து பாடியுள்ளனர். ராஜூ சுந்தரம் இந்தப் பாடலுக்கு நடனம் அமைத்திருந்தார். இந்தப் பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.