மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி நிதி விடுவிக்கப்படும்! - அமைச்சர் வன்னி அரசுசென்னை குற்றப்பிரிவில் அன்பில் மகேஸ் ஆஜர்!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜெமினி கணேசன் - சாவித்திரியின் பேரன் : கமல்ஹாசன் என்ன சொன்னார் தெரியுமா ?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜெமினி கணேசன் மற்றும் சாவித்திரியின் பேரன் அபினயை கமல்ஹாசன் அறிமுகப்படுத்தினார். 

Published On :

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜெமினி கணேசன் மற்றும் சாவித்ரியின் பேரன் அபினயை கமல்ஹாசன் அறிமுகப்படுத்தினார். 

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி நேற்று (அக்டோபர் 3) மிக பிரம்மாண்டமாக துவங்கியது. இந்தப் போட்டியில் பங்கேறப்வர்களை தனக்கே உரிய முறையில் அறிமுகப்படுத்தினார் நடிகர் கமல்ஹாசன். 

இந்த போட்டியில் விஜய் டிவியில் இருந்து தொகுப்பாளர் பிரியங்கா தேஷ்பாண்டே, நாம் இருவர் நமக்கு இருவர் மூலம் பிரபலமான ராஜூ ஜெயமோகன், சின்னத்திரை நடிகை பவானி ரெட்டி ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும், யூடியூப் விமர்சகர் அபிஷேக் ராஜா, நடிகர் அபினய், நதியா சாங், நகைச்சுவை நடிகர் இமான் அண்ணாச்சி, கௌதம் மேனனின் ஜோஷ்வா பட கதாநாயகன் வருண், நமிதா மாரிமுத்து, மாஸ்டர் பட நடிகர் சிபி சந்திரன், நாடக கலைஞர் தாமரைச் செல்வி, ஸ்ருதி ஜெயதேவன் ஆகியோர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்கள். 

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள அபினய், கணித மேதை ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்று படத்தில் ராமானுஜராக நடித்திருந்தார். இவர் நடிகர் ஜெமினி கணேசன் மற்றும் சாவித்திரியின் பேரன் ஆவார். 

அபினயை அறிமுகப்படுத்தும் போது, களத்தூரில் கண்ணம்மாவில் தன்னை அறிமுகப்படுத்திய ஜெமினி கணேசன் - சாவித்திரியின் பேரனை பிக்பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்துவதில் பெருமை என்றார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.