
இந்திய எல்லையில் ராணுவ வீரர்களுடன் நடிகர் அஜித் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள வலிமை படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியாகவிருக்கிறது. இந்தப் படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார். இந்தப் படத்தில் இருந்து வேற மாரி பாடல் மற்றும் கிலிம்ப்ஸ் விடியோ வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து வருகின்றன.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. நடிகர் அஜித் பைக்கில் உலகம் சுற்றும் மாரல் யாஜர்லு என்பவரை சந்தித்து உலகப் பயணம் குறித்து ஆலோசனை கேட்டறிந்தார். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வந்தன. இதனையடுத்து அஜித் பைக் பயணம் மேற்கொள்ளவிருப்பதாக தகவல் பரவியது.
இதையும் படிக்க | ’ராதே ஷியாம்' படத்தின் சிறப்பு டீசர் அக்.23 வெளியீடு
இந்த நிலையில் இந்தியாவை பாகிஸ்தானையும் இணைக்கும் வாகா எல்லைக்கு நடிகர் அஜித் தனது பைக்கில் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு ராணுவ வீரர்களுடன் உரையாடிய அவர் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். மேலும் ராணுவ வீரர்களுடன் அவர் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.