நடிகர் சிம்பு மற்றும் அவரது குடும்பத்தினர் மீது காவல் ஆணையரிடம் புகார்

நடிகர் சிம்பு மற்றும் அவரது குடும்பத்தினர் மீது காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 
நடிகர் சிம்பு மற்றும் அவரது குடும்பத்தினர் மீது காவல் ஆணையரிடம் புகார்

நடிகர் சிம்பு மற்றும் அவரது குடும்பத்தினர் மீது காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்த அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தை தயாரித்தவர் மைக்கேல் ராயப்பன். இந்தப் படம் வெளியாகி பெரும் தோல்வியை சந்தித்தது. இதனையடுத்து நடிகர் சிம்பு முழுமையான ஒத்துழைப்பு வழங்கவில்லை என தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்தார். 

இதனையடுத்து சிம்புவின் ஒவ்வொரு படம் வெளியாகும்போதும் மைக்கேல் ராயப்பன் - சிம்பு இடையே பிரச்சனை உருவாகும். அப்போது தயாரிப்பாளர் சங்கத்தின் மூலம் இந்தப் பிரச்னைக்கு தற்காலிகமாக தீர்வு காணப்படும். 

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் சிம்புவின் அப்பா டி.ராஜேந்தர் மற்றும் அம்மா உஷா ராஜேந்தர் ஆகியோர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்கள். மேலும் செய்தியாளர்களை சந்தித்தும் பேசினார்கள். அப்போது தங்கள் மகனின் படத்தை வெளியிட விடாமல் சிலர் தடுக்கிறார்கள் என்று தெரிவித்திருந்தார்கள். 

இதன் ஒரு பகுதியாக தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் சிம்பு மீதும், சிம்பு குடும்பத்தினர் மீதும் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதில், நான் குளோபல் இன்ஃபோடெயின்மென்ட் சினிமா நிறுவனத்தை கடந்த 12 வருடங்களாக நடத்தி வருகிறேன். பல வெற்றிப்படங்களை மேற்கண்ட நிறுவனத்தின் மூலமாக தயாரித்திருக்கிறேன். மேலும், 2016 ஆம் ஆண்டு சிம்பு நடித்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன்  என்ற படத்தை தயாரித்து வெளியிட்டேன். இந்தப் படத்தில் துவக்கத்தில் இருந்தே சிம்பு சரிவர நடிக்கவில்லை. 

சொன்ன தேதியில் சரியாக படப்பிடிப்பிற்கு வருவதில்லை. இந்த நிலையில் 50 சதவிகிதம் அளவுக்கு படம் எடுத்து முடிக்கப்பட்ட நிலையில் இந்தப் படத்தை இத்துடன் முடித்து வெளியிடலாம், நஷ்டம் ஏற்பட்டால் அதற்காக நானே ஒரு படத்தை ஊதியம் இல்லாமல் நடித்து தருகிறேன் என்று கூறினார். 

நான் ஒப்புக்கொள்ளவில்லை. என்னை வற்புறுத்தி நட்டம் ஏற்பட்டால் அந்த முழு பொறுப்பையும் நான் ஏற்றுக்கொள்கிறேன் என உறுதியளித்தார். அதனடிப்படையில் படம் சரியாக ஓடாமல் எனக்கு ரூ.15 கோடி அளவுக்கு நட்டம் ஏற்பட்டது. அதில் ரூ.12 கோடி விநியோகிஸ்தர்களுக்கு தரவேண்டியிருந்தது. இதன் காரணமாக என்னால் தொடர்ந்து படம் தயாரிக்க முடியவில்லை. 

இந்த நிலையில் சிம்பு என்னை தொடர்புகொண்டு விரைவில் அடுத்த படத்தை அறிவியுங்கள் என்றார். ஆனால் அதன் பிறகு அவர் என்னை தொடர்புகொள்ளவேயில்லை. என்னை ஏமாற்றும் நோக்கத்தோடு ஆரம்பத்திலிருந்தே செயல்பட்டு வந்தார். 

இதனையடுத்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தேன். அப்போதைய தலைவரான விஷால் எனது புகார் மீது விசாரணை நடத்தி, விரைவில் ஒரு படம் நடித்துத் தர வேண்டும் என்று தெரிவித்தார். அதற்கு சிம்புவும் சம்மதம் தெரிவித்தார். ஆனால் அதன் பிறகு நிர்வாகம் மாறியது. படத்தில் நடித்து தராமல் தற்போதுவரை இழுத்தடித்து வருகிறார்கள். 

சில நாட்களுக்கு முன் மாநாடு படத்தை வெளியிட தடை போட்டிருப்பதாகவும், கந்து வட்டி கேட்பதாகவும் பல முறையற்ற குற்றச்சாட்டுகளை சிம்புவின் பெற்றோர் தெரிவித்திருந்தனர். ஆனால் மாநாடு படத் தயாரிப்பாளர் மாநாடு தீபாவளிக்கு வெளியிட்டால் விநியோகஸ்தர்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படும் என்றும் அதனால் மாநாடு படத்தை 25 ஆம் தேதி வெளியிட உள்ளதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையையும் இத்துடன் இணைத்துள்ளேன். 

இதுதொடர்பான விசாரணைக்கு சிம்புவும், சிம்புவின் குடும்பத்தினரும் ஒத்துழைப்பு தரவில்லை. எனவே மேற்கண்ட விஷயத்தில் தாங்கள் தலையிட்டு நடவடிக்கை எடுத்து எனக்கு நல்லதொரு முடிவினை வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன். மேலும் துவக்தத்தில் இருந்தே என் பொய்யான வாக்குறுதியளித்து எனக்கு பெரும் நஷ்டத்தை வரவழைத்து ஏமாற்றிய சிம்பு மற்றும் அவரது தாய் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் என்று அந்தப் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com