''அந்த அரசியலைப் பற்றி பேச விரும்பவில்லை, நாய் சேகர் தலைப்பு...'': நடிகர் சிவகார்த்திகேயன் அதிரடி

தண்ணீர் அரசியல் குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் கருத்து தெரிவித்துள்ளார். 
''அந்த அரசியலைப் பற்றி பேச விரும்பவில்லை, நாய் சேகர் தலைப்பு...'': நடிகர் சிவகார்த்திகேயன் அதிரடி

நெல்சன் திலீபகுமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் திரைப்படம் வருகிற அக்டோபர் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தற்போது பீஸ்ட் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இதனால் டாக்டர் படத்துக்கு விஜய் ரசிகர்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

இந்த நிலையில் கோயம்புத்தூரில் பிரபல கார்டூனிஸ்ட் மதியின் இணையதள துவக்கவிழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டார். 

அப்போது பேசிய அவர், மரம் நட வேண்டும் எனும் பேசும்பேது நாம் கண்டுகொள்ளவில்லை. அதன் பலனை தற்போது அனுபவிக்கிறோம். கடந்த 2001 ஆம் ஆண்டுமுதல் 2003 ஆம் ஆண்டு வரை என் அப்பா கோவையில் பணிபுரிந்தார். 

விடுமுறையில் நாங்கள் திருச்சியில் இருந்து கோவைக்கு செல்வோம். திருச்சியில் வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும். கோயம்புத்தூர் சிலுசிலுவென இருக்கும். ஆனால் தற்போது படப்பிடிப்பிற்காக இங்கு வரும்போது ஏ.சி இல்லாமல் இங்கு இருக்க முடியவில்லை.

தண்ணீர் பற்றாக்குறையால் வணிகமானதா ? அல்லது வணிகமானதால் பற்றாக்குறையாக்கப்பட்டதா ? என்று தெரியவில்லை. அந்த அரசியலைப் பற்றி நான் பேச விரும்பவில்லை. தண்ணீர் வீணாவதைத் தவிர்த்தாலே பெருமளவு சேமிக்க முடியும். பணம் சம்பாதித்து என்ன செய்யப்போகிறோம். அல்லது சம்பாதிப்பதை வைத்து தண்ணீர் வாங்கப் போகிறோமா எனத் தெரியவில்லை. என்றார். 

நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த சிவகார்த்திகேயன், நாய் சேகர் படம் படப்பிடிப்பு முடிந்து  தயாராகிவிட்டது. அந்த டைட்டிலை முதலியே முடிவு செய்து படம் எடுத்துள்ளனர். சதீஷ் கதாநாயகனாக நடிப்பதால் பெரிய தலைப்பு தேவைப்படுகிறது.

இதுகுறித்து நடிகர் வடிவேலுவிடம் சதீஷ் பேசியுள்ளார். வேறு தலைப்பு வைப்பதாக வடிவேலுவும் அவரிடம் சொல்லியுள்ளார். வடிவேலுவுக்கு எந்த டைட்டில் வைத்தாலும் பயங்கரமாகத்தான் இருக்கும். தமிழில் படத்தின் தலைப்பு வைப்பது நல்லது. நானும் தமிழில் தலைப்பு வைக்கச் சொல்கிறேன் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com