
பாக்கியலட்சுமி கதாநாயகி சுசித்ரா தனது மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் விடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர, அவை வைரலாகி வருகின்றன.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான தொடர்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்தத் தொடரில் பாக்கியலட்சுமியாக நடித்து வரும் சுசித்ரா ஷெட்டியின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
படிக்காத குடும்பத் தலைவியாக அவர் படும் கஷ்டங்கள் தான் இந்தத் தொடரின் மையக் கரு. தமிழகத்தின் பெரும்பாலான பெண்களை பொறுத்திப் பார்க்கும் அளவுக்கு அந்த வேடம் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.
கர்நாடகா மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவரான சுசித்ரா தமிழில் இயக்குநர் விஜய்யின் 'சைவம்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் இவர் தனது மகளுடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் விடியோக்களை அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். அவரது பதிவுகளைப் பார்க்கும் ரசிகர்கள், சுசித்திராவிற்கு இவ்வளவு பெரிய மகளா என ஆச்சரியத்துடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.