
பிக்பாஸ் கவின் நடித்துள்ள 'லிஃப்ட்' திரைப்படம் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வருகிற அக்டோபர் 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் மற்றும் சரவணன் மீனாட்சி தொடர்களில் மூலம் ரசிகர்களுக்கு பரிட்சையமானவர் கவின். இதனையடுத்து அவர் நட்புனா என்னனு தெரியுமா என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார்.
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் சாண்டியுடன் நட்பு, சாக்ஷி அகர்வால் மற்றும் லாஸ்லியாவுடன் காதல் பிரச்னை என மிகவும் பரபரப்பாக பேசப்பட்டார். இந்த நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான ரசிகர்களைப் பெற்றார்.
இதனையடுத்து அவர் 'பிகில்' அம்ரிதாவுடன் இணைந்து 'லிஃப்ட்' படத்தில் நடித்தார். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் பாடிய 'என்ன மயிலு' பாடல் வெளியாகி, பெரும் வரவேற்பைப் பெற்றது. இதன் காரணமாக படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்தது.
இந்த நிலையில் 'லிஃப்ட்' திரைப்படம் திரையரங்கில் வெளியாகும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். தற்போது இந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏகா எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தனது சுட்டுரைப் பக்கத்தில், 'லிஃப்ட்' திரைப்படம் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வருகிற அக்டோபர் 1 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவித்துள்ளது.
Up and down, up and down, up and down, that's how our heartbeat sounds. #Lift Trailer out tomorrow! @DisneyPlusHS #DisneyPlusHotstarMultiplex @Kavin_m_0431 @Actor_Amritha @EkaaEntertainm1 @VineethVarapra1 @Hepzi90753725 @willbrits @ganesh_madan @nyshanth_r @dancersatz pic.twitter.com/xtzlyUiI09
— Ekaa Entertainment (@EkaaEntertainm1) September 23, 2021