
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் புதிய முன்னோட்டத்தில் லட்சுமி அம்மா கதாப்பாத்திரம் மீண்டும் வருவது போல் காட்டப்பட்டுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்தத் தொடரில் லட்சுமி அம்மாள் கதாப்பாத்திரம் இறந்ததுபோல் காட்டப்பட்டது.
இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் வேறு தோற்றத்தில் மீண்டும் ஷீலா இடம் பெறும் காட்சிகள் முன்னோட்டமாக வெளியிடப்பட்டுள்ளது. அவரது வருகையைப் பார்க்கும் தனம் அதிர்ச்சியாவது போல் அந்த முன்னோட்டம் அமைந்துள்ளது. லட்சுமி அம்மாள் சாயலில் உள்ள வேறு யாரோ போல் அவர் காட்டப்படலாம் என்பது ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.
இதையும் படிக்க: 'வலிமை' வெற்றிபெற வேண்டி அஜித் ரசிகர்கள் செய்த காரியம்: ஆச்சரியத்தில் கிராம மக்கள்
லட்சுமி அம்மா வேடத்தில் நடித்திருப்பவர் நடிகர் விக்ராந்த்தின் அம்மா என்பது குறிப்பிடத்தக்கது. விக்ராந்த் தற்போது ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சர்வைவர் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.
அதன் காரணமாகவே ஷீலா கதாப்பாத்திரம் இறந்ததாக காட்டப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அதனை ஷீலா மறுத்தார். மீண்டும் விஜய் டிவியின் புதிய தொடர் ஒன்றில் கதாநாயகியின் அம்மாவாக நடிக்கவிருப்பதாக தெரிவித்தார்.