

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளியான 'பிசாசு' திரைப்படம் பெரிய வெற்றியடைந்ததைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்திற்கான பேச்சவார்த்தை நடைபெற்று வந்தது.
பின் முழுக்கதையும் தயாரான பின்பு நடிகை ஆண்ட்ரியாவை நாயகியாக வைத்து பிசாசு - 2 திரைப்படத்தை இயக்கி வந்த நிலையில் அப்படத்தின் படப்பிடிப்பு கடந்த செப்-1 ஆம் தேதி நிறைவடைந்திருந்தது.
இந்நிலையில் வெளியீட்டுக்குத் தயாராகி வரும் வேளையில் 'பிசாசு 2' படத்தின் முதல் பாடலான ’உச்சந்தல ரேகையில..’ என்கிற பாடல் வரும் அக்.1 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தொடர்ந்து தன்னுடைய படங்களில் இளையராஜாவை பயன்படுத்தி வந்த மிஷ்கின் முதல் முறையாக இசையமைப்பாளர் கார்த்திக் ராஜாவுடன் இணைவதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது,
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.