மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் உதயநிதிக்கு வில்லனாக ஃபகத் ஃபாசில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்ணன் படத்துக்குப் பிறகு துருவ் நடிக்கும் படத்தை மாரி செல்வராஜ் இயக்கவிருப்பதாக தகவல் வெளியானது. கபடியை மையப்படுத்தி உருவாகவிருக்கும் இந்தப் படத்தை இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிக்கவிருப்பதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் துருவ் படத்துக்கு முன்னதாக உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தை மாரி செல்வராஜ் இயக்கவிருக்கிறார். இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தில் வில்லனாக பிரபல மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சூப்பர் டீலக்ஸ் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான ஃபகத் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார். கமல்ஹாசன் மற்றும் விஜய் சேதுபதியுடன் இணைந்து ஃபகத் நடிக்கும் காட்சிகளைப் பார்க்க ரசிகர்களிடையே ஆவல் எழுந்துள்ளது.