பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் இயக்குநர் கௌதம் மேனன் பட கதாநாயகன் : சுவாரசியத் தகவல்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கவிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கௌதம் மேனனின் ஜோஷ்வா பட கதாநாயகன் வருண் கலந்துகொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் இயக்குநர் கௌதம் மேனன் பட கதாநாயகன் : சுவாரசியத் தகவல்
Published on
Updated on
2 min read

கமல்ஹாசன் தொகுத்து வழங்கவிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கௌதம் மேனனின் ஜோஷ்வா பட கதாநாயகன் வருண் கலந்துகொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கமல்ஹாசன் தொகுத்து வழங்கவிருக்கும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி வருகிற அக்டோபர் 3 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகவிருக்கிறது. இதனிடையே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் குறித்த யூகங்கள் பல்வேறு விதமாக வெளியாகி வருகின்றன. 

அந்த வகையில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜோஸ்வா படத்தின் கதாநாயகன் வருண் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷின் உறவினர் தான் வருண் என்பது குறிப்பிடத்தக்கது. 

கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜோஸ்வா இமை போல் காக்க திரைப்படம் இன்னும் வெளியாகாத நிலையில், வருண் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதன் மூலம் அந்தப் படத்துக்கு நல்ல விளம்பரம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக ஜோஸ்வா திரைப்பட வெளியிட உதவிகரமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் இந்த நிகழ்ச்சியில் விஜய் டிவியின் தொகுப்பாளர் பிரியங்கா, குக் வித் கோமாளி மூலம் பிரபலமடைந்த கனி, சுனிதா, சன் டிவி செய்தி வாசிப்பாளர் கண்மணி, மாடல் கோபிநாத், நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் நடித்துள்ள ராஜூ ஜெயமோகன், துள்ளுவதோ இளமை புகழ் அபினய், நடிகை வடிவுக்கரசி, பிரியா ராமன், சூசன்,  பாய்ஸ் நடிகர் மணிகண்டன், கழுகு பட நடிகர் கிருஷ்ணா உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. 

தற்போது போட்டியாளர்கள் சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர். வருகிற ஞாயிற்றுக்கிழமை இந்த நிகழ்ச்சியில் யார் யார் கலந்துகொள்கிறார்கள் என்ற தகவல் தெரிந்துவிடும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com