'சிங் இன் தி ரெயின்'.. பிரபுதேவாவுடன் பாடிய வடிவேலு: ரசிகர்கள் நெகிழ்ச்சி (விடியோ)

21 ஆண்டுகள் கழித்தும் அதே புத்துணர்ச்சியும், நகைச்சுவையும் இந்த விடியோவில் இருப்பதாக ரசிகர்கள் நெகிழ்ச்சி 
'சிங் இன் தி ரெயின்'.. பிரபுதேவாவுடன் பாடிய வடிவேலு: ரசிகர்கள் நெகிழ்ச்சி (விடியோ)


'மனதை திருடிவிட்டாய்' படத்தில் நகைச்சுவை பாணியில் பாடிய சிங் ''இன் தி ரெயின்..'' பாடலை நடிகர் வடிவேலு 21 ஆண்டுகள் கழித்து மீண்டும் பாடியுள்ளார். 

மனதை திருடிவிட்டாய் படத்தில் நாயகனாக நடித்த பிரபுதேவா இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

2001ஆம் ஆண்டு வெளியான 'மனதை திருடிவிட்டாய்' திரைப்படத்தில் அனைவரையும் கவர்ந்த நகைச்சுவைகளில் ஒன்றாக இருந்தது வடிவேலு தனது பாணியில் பாடிய ''சிங் இன் தி ரெயின்'' என்று ஆரம்பபாகும் பாடல்.

இன்று வரை இந்த பாடல் மக்கள் மத்தியில் புழக்கத்தில் உள்ளது. அந்த அளவுக்கு மக்களோடு ஒன்றிய நகைச்சுவை காட்சியாக இருந்தது இப்படத்தில் இடம்பெற்ற வடிவேலுவின் ''சிங் இன் தி ரெயின்..'' பாடல் இடம் பெறும் நகைச்சுவைக் காட்சிகள்.

இந்த பாடலை பிரபுதேவாவுடன் சேர்ந்து நடிகர் வடிவேலு அதே பாணியில் மீண்டும் பாடி அசத்தியுள்ளார். இந்த விடியோவை நட்பு எனக் குறிப்பிட்டு பிரபுதேவா சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

இந்த விடியோவைக் கண்ட ரசிகர்கள், 21 ஆண்டுகள் கழித்தும் அதே புத்துணர்ச்சியும், நகைச்சுவையும் இந்த விடியோவில் இருப்பதாக நெகிழ்ச்சி அடைந்து அதனைப் பகிர்ந்து வருகின்றனர். 

நடிகர் வடிவேலு நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது நாய் சேகர் ரிட்டன்ஸ், மாமனிதன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com