பிரபல தயாரிப்பாளர் மரணம் : சிவகார்த்திகேயன் உருக்கமான பதிவு

பிரபல தயாரிப்பாளர் மரணமடைந்தது குறித்து சிவகார்த்திகேயன் இரங்கல் தெரிவித்துள்ளார். 
பிரபல தயாரிப்பாளர் மரணம் : சிவகார்த்திகேயன் உருக்கமான பதிவு
Updated on
1 min read

பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் நாராயண் தாஸ் நாரங் உடல் நலக்குறைவால் ஹைதராபாத்தில் இன்று(ஏப்ரல் 19) காலமானார். அவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

அவரது மறைவுக்கு நடிகர்கள் மகேஷ் பாபு, சிரஞ்சீவி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சிவகார்த்திகேயன் தற்போது நடித்துவரும் 'எஸ்கே 20' படத்தை நாராயண் தாஸ் நாரங் தயாரித்துவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில், ''அன்புக்குரிய தயாரிப்பாளர் நாராயண்தாஸ் தாரங்கின் மரண செய்தி கேட்டு அளவற்ற துன்பமடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com