
நடிகை சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாக என் அமைதியை புறக்கணிப்பு என புரிந்துகொள்ளாதீர்கள் என குறிப்பிட்டுள்ளார்.
நடிகை சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் என்னுடைய அமைதியை புறக்கணிப்பு என்றும் என்னுடைய மௌனத்தை நான் ஒப்புக்கொள்கிறேன் என்றும், என்னுடைய இரக்க குணத்தை என்னுடைய பலவீனம் எனவும் தவறாக புரிந்துகொள்ளாதீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
நாக சைதன்யாவை விவகாரத்து செய்வதாக அறிவித்ததிலிருந்து சமந்தா குறித்து சர்ச்சைகள் உருவான வண்ணம் இருக்கின்றன. ஆனால் தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலளிக்காமல் சமந்தா மௌனம் காத்துவந்தார். இந்த நிலையில்தான் அவற்றிற்கெல்லாம் மொத்தமாக பதில் சொல்லும் விதமாக இப்படி பதிவிட்டுள்ளதாக அவரது ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா இணைந்து நடித்த காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் டிரெய்லர் நேற்று (ஏப்ரல் 23) வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இந்தப் படம் வருகிற 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.