மம்மூட்டியுடன் இணைந்த 'விக்ரம்' ஏஜெண்ட் டீனா

மம்மூட்டியுடன் இணைந்த 'விக்ரம்' ஏஜெண்ட் டீனா

 விக்ரம் படத்தில் ஏஜெண்ட் டீனாவாக நடித்து பிரபலமான வசந்தி அடுத்ததாக மம்மூட்டியுடன் இணைந்து நடிக்கிறார். 
Published on

லோகேஷ் இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரித்து நடித்த விக்ரம் படம் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது. இந்தப் படத்தின் வெற்றிக்கு கதாப்பாத்திரங்கள் ஒவ்வொன்றும் மிக வலுவாக அமைக்கப்பட்டிருந்ததே காரணமாக கூறப்படுகிறது. 

அதன் ஒரு பகுதியாக படத்தில் யாரும் எதிர்பாராத விதமாக அதிரடி காட்டும் ஏஜெண்ட் டீனா கதாப்பாத்திரம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. அந்த கதாப்பாத்திரத்தில் வசந்தி என்பவர் நடித்திருந்தார். அடிப்படையில் நடனக் கலைஞரான வசந்தி ஏராளமான பாடல்களில் நடனமாடியிருக்கிறார். 

விஜய்யுடன் பகவதி படத்திலும், அஜித்துடன் வில்லன் படத்திலும் வசந்தி ஒரே உடையில் நடனமாடியிருப்பார். அந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. 

இந்த நிலையில் வசந்தி அடுத்ததாக மம்மூட்டியுடன் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். பி.உன்னிகிருஷ்ணன் இயக்கும் இந்தப் படத்தின்  படப்பிடிப்பு தளத்தில் மம்மூட்டியுடன் வசந்தி இருக்கும் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com