இயக்குநர் ஷங்கர், சுரேஷ் ரெய்னாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம்!

இயக்குநர் ஷங்கர் மற்றும் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
இயக்குநர் ஷங்கர், சுரேஷ் ரெய்னாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம்!
Published on
Updated on
1 min read

இயக்குநர் ஷங்கர் மற்றும் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

இந்திய அளவில் பிரபலமடைந்த இயக்குநர் ஷங்கருக்கும் இந்திய அணியின் பிரபல கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்குக் கெளரவ டாக்டர் பட்டத்தை வேல்ஸ் பல்கலைக்கழகம் வழங்கியுள்ளது.

ஆண்டுதோறும் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் துறை ரீதியாக சாதனை படைத்தவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுவது வழக்கம். 

இந்நிலையில், கிரிக்கெட் வீரர் ரெய்னா மற்றும் இயக்குநர் ஷங்கருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படும் என அறிவித்திருந்த நிலையில், இன்று இருவருக்கும் பட்டத்தை வழங்கி வேல்ஸ் பல்கலைக்கழகம் கௌரவப்படுத்தியுள்ளது.

பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி , வேல்ஸ் குழுமத் தலைவர் ஐசரி.கே.கணேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com