புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

மாமனிதன்: சர்வதேச திரைப்பட விழாவில் 3 விருதுகள்!

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மாமனிதன் திரைப்பத்திற்கு சர்வதேச திரைப்பட விழாவில் 3 விருதுகள் கிடைத்துள்ளது. 

News image
Updated On :9 ஆகஸ்ட் 2022, 9:56 am

DIN

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மாமனிதன் திரைப்பத்திற்கு சர்வதேச திரைப்பட விழாவில் 3 விருதுகள் கிடைத்துள்ளது. 

யுவன் ஷங்கர் ராஜா தனது ஒய்எஸ்ஆர் ஃபிலிம்ஸ் சார்பாக தயாரித்த படம் மாமனிதன். சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி முதன்மை வேடத்தில் நடித்த இந்தப் படத்துக்கு இளையராஜா - யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இந்தப் படத்துக்கு இசையமைத்திருந்தனர். 

ஸ்டுடியோ 9 சார்பாக இந்தப் படத்தை ஆர்கே சுரேஷ் வெளியிட்டார். கடந்த ஜூன் 24 ஆம் தேதி வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. 

கொல்கத்தாவில் நடைபெற்ற தாகூர் சர்வதேச திரைப்பட விழாவில் மாமனிதன் படத்திற்கு 3 விருதுகள் கிடைத்துள்ளன. சிறந்த நடிகருக்கான விருது விஜய் சேதுபதிக்கும், சினிமாவில் சிறந்த பங்களிப்பு மற்றும் விமர்சகர்களின் விருப்பமான படம் என 2 பிரிவுகளில் இயக்குநர் சீனு ராமசாமிக்கு விருது தரப்பட்டது. 

இதனை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த சீனுராமசாமி தாகூர் திரைப்பட விழாவிற்கு நன்றியினைத் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.