'விருமன்' பட வசூல் நிலவரம் எப்படி இருக்கிறது? - விநியோகிஸ்தர் முக்கிய தகவல்

விருமன் படத்துக்கு முதல் நாள் கிடைத்த வரவேற்பு குறித்து அந்தப் படத்தின் விநியோகிஸ்தர் தகவல் பகிர்ந்துள்ளார்.  
'விருமன்' பட வசூல் நிலவரம் எப்படி இருக்கிறது? - விநியோகிஸ்தர் முக்கிய தகவல்

விருமன் படத்துக்கு முதல் நாள் கிடைத்த வரவேற்பு குறித்து அந்தப் படத்தின் விநியோகிஸ்தர் தகவல் பகிர்ந்துள்ளார். 

சூர்யா தயாரிப்பில் கார்த்தி நடித்துள்ள விருமன் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்த நிலையில் விருமன் படத்தை தனது சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சார்பாக வெளியிடும் சக்தி வேலன் முக்கிய தகவலைப் பகிர்ந்துள்ளார். 

சக்திவேலன் தனது ட்விட்டர் பக்கத்தில், கடைக்குட்டி சிங்கத்தின் முதல் நாள் முதல் காட்சி வசூலை விட விருமன் வசூல் மூன்று மடங்கு அதிகமாக உள்ளது. பட்டி தொட்டி சிட்டியிலும் கொடி பறக்குது. மிகப்பெரிய வெற்றிப் படம் என தெரிவித்துள்ளார்.

இதனால் சூர்யா மற்றும் கார்த்தி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் இந்தப் படம் இருப்பதால் மிகப்பெரிய வசூல் சாதனையை இந்தப் படம் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்தப் படத்தில் இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி நாயகியாக அறிமுகமாகியுள்ளார். அவருக்கு இந்தப் படம் ஒரு நல்ல அறிமுகத்தைக் கொடுத்துள்ளது. மேலும் நீண்ட இடைவேளைக்கு பிறகு யுவனின் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com