

பா.ரஞ்சித் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா, கலையரசன் உள்ளிடோர் நடித்துள்ள ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நாளை நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
யாழி பிலிம்ஸ் மற்றும் நீலம் புரொடக்சன்ஸ் சார்பாக பா.ரஞ்சித் தயாரித்து இயக்கியுள்ள படம் நட்சத்திரம் நகர்கிறது. முழுக்க முழுக்க காதல் கதையாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்தத் திரைப்படத்தின் முதல் பாடலான ‘ரங்கராட்டினம்’ பாடல் சமீபத்தில் வெளியான நிலையில் தற்போது படத்தின் ‘டிரைலர்’ வெளியாகியுள்ளது. ‘பெண்ணும் பெண்ணும்’ ‘ஆணும் ஆணும்’ காதலித்தால் என்ன தவறு எனத் தன் பாலின, எதிர் பாலின காதல்களை மையமாக வைத்து படம் உருவாகியுள்ளது.
கிஷோர் குமார் ஒளிப்பதிவில் இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு பட இசையமைப்பாளர் தென்மா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி நேரடியாக திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை சென்னையில் நாளை நடைபெறவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.