

நடிகை ஆண்ட்ரியா தனது தங்கையின் திருமண புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
பாடகி, நடிகை என தமிழ் திரையுலகில் கலக்கிக்கொண்டிருக்கிறார் ஆண்ட்ரியா. தற்போது மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 படத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ளார்
இந்தப் படத்தில் ஆண்ட்ரியா நிர்வாணமாக நடித்திருந்ததாகவும், குழந்தைகளும் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும் என்பதால் அந்தக் காட்சிகளை நீக்கி விட்டதாகவும் சமீபத்தில் ஒரு பேட்டியில் இயக்குநர் மிஷ்கின் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
பிசாசு 2 திரைப்படம் வருகிற 31 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. மேலும் கா, மாளிகை, அனல்மேலே பனித்துளி போன்ற படங்கள் ஆண்ட்ரியா நடிப்பில் அடுத்து உருவாகி வருகின்றன.
இந்த நிலையில் நடிகை ஆண்ட்ரியா தனது தங்கை நடியாவின் திருமண புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். மணமகனின் பெயரை கெட்ரிக் எனக் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து மணமக்களுக்கு ஆண்ட்ரியாவின் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.