திரைப்படமாகும் புரூஸ் லீ வாழ்க்கை வரலாறு: இயக்குநர் யார் தெரியுமா?

குங்ஃபூ தற்காப்பு கலை வீரர் புரூஸ் லீயின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
திரைப்படமாகும் புரூஸ் லீ வாழ்க்கை வரலாறு: இயக்குநர் யார் தெரியுமா?
Published on
Updated on
1 min read

குங்ஃபூ தற்காப்பு கலை வீரர் புரூஸ் லீயின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பிரபல குங்ஃபூ தற்காப்பு கலை வீரராக அறியப்படுபவர் புரூஸ் லீ. குங்ஃபூ கலையின் மூலம் அறியப்பட்ட இவருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். குறுகிய காலம் மட்டுமே வாழ்ந்த இவர் தனது 32ஆவது வயதில் காலமானார். இவரது மரணம் குறித்து குழப்பம் நீடித்து வந்த நிலையில் அவரது சிறுநீரகத்திலிருந்த அதிகப்படியான நீர் வெளியேற்ற முடியாமல் போனதே அவரது மரணத்திற்கு காரணம் என சமீபத்தில் மருத்துவ நிபுணர்கள் உறுதி செய்தனர். 

இந்நிலையில் புரூஸ் லீயின் வாழ்க்கைப் பயணத்தை திரைப்படமாக்கும் முயற்சிகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆஸ்கர் விருது வென்ற ‘லைஃப் ஆஃப் பை’ திரைப்படத்தை இயக்கிய ஆங் லி இந்தப் படத்தை இயக்க உள்ளதாக வெளியான செய்தி சினிமா ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தப் படத்தில் ஆங் லியின் மகன் மசோன் லீ புரூஸ் லீ கதாபாத்திரத்தில் தோன்ற உள்ளார். இந்தப் படத்தைத் தயாரிக்க சோனி நிறுவனம் முன்வந்துள்ளது. 

இதுதொடர்பாக பேசிய இயக்குநர் ஆங் லி, “கிழக்கு மற்றும் மேற்கு நாடுகளில் தற்காப்பு கலையை பிரபலப்படுத்தியவர் புருஸ் லீ. அவரது கடின உழைப்பை நிஜத்தில் கொண்டு வர உள்ளது மகிழ்ச்சியளிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com