

நடிகர் வடிவேலு செய்த ரீல்ஸ் வைரலாகி வருகிறது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு வடிவேலு நாயகனாக நடிக்கும் படம் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’. இந்த படத்தில் வடிவேலுவுடன் இணைந்து நடிகை ஷிவாணி நாராயணன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
லைகா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை சுராஜ் இயக்கியுள்ளார்.
படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஏற்கெனவே படத்திலிருந்து வடிவேலு பாடிய 2 பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன.
இதையும் படிக்க: இவர்தான் ஹீரோவா? ஜிகர்தண்டா - 2 குறித்து தகவல்
இப்படம் நாளை வெளியாகிறது. இந்நிலையில், புரோமோஷனுக்காக இந்திய அளவில் பிரபலமான ‘கச்சா பாதாம்’ என்கிற பாடலுக்கு நடிகர் வடிவேலு நடனமாடி அசத்தியுள்ளார். அவருக்கே உரித்தான உடல்மொழியில் சிரிக்க வைக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.