
ஜீவா நடிப்பில் உருவான ‘வரலாறு முக்கியம்’ திரைப்படத்தின் ‘பொத்தி பொத்தி வளத்த புள்ள மேகல’ பாடல் வெளியாகியுள்ளது.
ஆர்.பி. செளத்ரி தயாரிப்பில் அறிமுக இயக்குனர் சந்தோஷ் ராஜன் இயக்கத்தில் ஜீவா நடித்துள்ள திரைப்படம் ‘வரலாறு முக்கியம்’. இப்படம் வருகிற டிச.9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இது சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் 92-வது படம். நடிகை காஷ்மீரா பர்தேஷி (சிவப்பு மஞ்சள் பச்சை படப்புகழ்) கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் பிரக்யா நாகரா, விடிவி கணேஷ், கே.எஸ். ரவிக்குமார், மலையாள நடிகர் சித்திக், சரண்யா பொன்வண்ணன், சாரா எனப் பலரும் நடித்துள்ளார்கள். சக்தி சரவணன் ஒளிப்பதிவு, இசை - ‘ஜிமிக்கி கம்மல்’ பாடல் புகழ் ஷான் ரஹ்மான்.
இந்தப் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில், படத்திலிருந்து ‘பொத்தி பொத்தி வளத்த மேகல’ பாடல் வெளியாகியுள்ளது. சந்தோஷ் ராஜன் இந்தப் பாடலை எழுதியுள்ளார். வடிவேலுவின் நகைச்சுவை வசனத்தில் இருந்து இந்தப் பாடல் வரிகளை எழுதியுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் இந்தப் பாடல் பிரபலமாகி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.