துணிவு 3-வது பாடல் குறித்து அறிவிப்பு

துணிவு படத்தின் 3-வது பாடல் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
துணிவு 3-வது பாடல் குறித்து அறிவிப்பு
Updated on
1 min read

துணிவு படத்தின் 3-வது பாடல் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித் குமார், இயக்குநர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் 3-வது முறையாக இணைந்துள்ள படம் 'துணிவு'. பஞ்சாபில் நடைபெற்ற வங்கி்க் கொள்ளையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. 

இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். மஞ்சு வாரியர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். 2023, பொங்கலை முன்னிட்டு இப்படம் திரைக்கு வருகிறது.

இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘சில்லா..சில்லா’, ‘காசேதான் கடவுளடா’ பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், 3-வது பாடலாக ‘கேங்ஸ்டா’ பாடல் இருக்கும் என இசையமைப்பாளர் ஜிப்ரான் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com