’தளபதி 68’ விஜய்யின் சம்பளம் இத்தனை கோடிகளா?

நடிகர் விஜய் - அட்லி இணையும் படம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.
’தளபதி 68’ விஜய்யின் சம்பளம் இத்தனை கோடிகளா?
Updated on
1 min read

நடிகர் விஜய் - அட்லி இணையும் படம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.

விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக விஜய் 67 படத்தின் முன் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார். 

மிகப்பெரிய பொருள் செலவில் இப்படம் உருவாகவுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் துவங்காத நிலையில், சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் அட்லி இயக்கும் ‘விஜய் 68’ படத்தில் நடிகர் விஜய்க்கு ரூ.150 கோடியும் அட்லிக்கு ரூ.50 கோடியும் சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.  மேலும், படப்பிடிப்பு செலவுகளுக்காக ரூ.200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பான் இந்தியா திரைப்படமாக ‘விஜய் 67’ வெளியாகிறது. அதன்பின், விஜய்யின் மார்க்கெட் நிலவரம் உயரக்கூடும் என்பதால் அட்லி கூட்டணியில் மிகப்பிரம்மாண்டமாக உருவாகிறது ‘விஜய் 68’!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com