சூரரைப் போற்று ஹிந்தி ரீமேக்: ஜி.வி.பிரகாஷ் வெளியிட்ட புதிய அப்டேட்

சூரரைப் போற்று படத்தின் ஹிந்தி ரீமேக் குறித்து புதிய அப்டேட்டை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் வெளியிட்டுள்ளார்.
சூரரைப் போற்று ஹிந்தி ரீமேக்: ஜி.வி.பிரகாஷ் வெளியிட்ட புதிய அப்டேட்

சூரரைப் போற்று படத்தின் ஹிந்தி ரீமேக் குறித்து புதிய அப்டேட்டை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் வெளியிட்டுள்ளார்.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் 2020ஆம் ஆண்டு நேரடியாக அமேசான் ப்ரைமில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் சூரரைப் போற்று. இந்த படத்திற்கு தேசிய விருதுகளும் வழங்கப்பட்டது.

தமிழில் பெற்ற வரவேற்பை தொடர்ந்து ஹிந்தி ரீமேக்கை சுதா கொங்கரா இயக்கி வருகிறார். இந்த படத்தில் சூர்யா கதாபாத்திரத்தில் அக்சய் குமார் நடிக்கிறார். சூர்யா இணை தயாரிப்பாளராக இணைந்துள்ளார்.

இந்நிலையில், ஹிந்தி ரீமேக்கிற்கான இசை அமைக்கும் பணி தொடங்கியுள்ளதாக இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் தெரிவித்துள்ளார்.

நடிகர் சூர்யா, அக்சய் குமார் உள்ளிட்டோரை டேக் செய்து வெளியிட்ட புகைப்படத்தில் ஜி.வி.பிரகாஷுடன் இயக்குநர் சுதா கொங்கராவும் உள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com