சம்பளத்தை உயர்த்திய அனுபமா

நடிகை அனுபமா பரமேஸ்வரன் தன் சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சம்பளத்தை உயர்த்திய அனுபமா

நடிகை அனுபமா பரமேஸ்வரன் தன் சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘பிரேமம்’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். அப்படத்தின் இமாலய வெற்றியின் மூலம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடிக்க துவங்கினார்.

குறிப்பாக, தனுஷ் நடிப்பில் வெளிவந்த ‘கொடி’ படத்தில் நல்ல நடிப்பை வழங்கியிருந்தார்.

இந்நிலையில், சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ‘கார்த்திகேயா - 2’ மற்றும் ‘18 பேஜஸ்’ படங்கள் வசூல் ரீதியாக பெரிய வெற்றியைப் பெற்றதால் தன் சம்பளத்தை ரூ.50 லட்சத்திலிருந்து ரூ.1.20 கோடியாக அனுபமா உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com