
விஜய் டிவி நிகழ்ச்சிகளைப் போல தொடர்களுக்கும் தனி வரவேற்பு உண்டு. சமீப காலமாக சின்னத்திரை தொடர்களுக்கு திரைப்படங்களின் தலைப்புகள் வைப்பது டிரெண்டாகி வருகிறது.
அந்த வகையில் விஜயகாந்த் பட தலைப்பான வைதேகி காத்திருந்தாள் தொடர் கடந்த சில வாரங்களுக்கு முன் ஒளிபரப்பானது. இந்தத் தொடரில் பிரஜின் நாயகனாகவும், சரண்யா நாயகியாகவும் நடித்துவந்தனர். தொடக்கத்தில் இருந்தே இந்தத் தொடருக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.
இந்த நிலையில் இந்தத் தொடரிலிருந்து திடீரென பிரஜின் விலகியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதற்கான காரணம் திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருப்பதாகவும், ஒரே நேரத்தில் திரைப்படத்திலும் சின்னத்திரை தொடரிலும் நடிக்க முடியாததன் காரணமாகவே தொடரில் இருந்து விலகியதாகவும் தெரிவித்திருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.