ஆஸ்கர் இறுதிப் போட்டிக்கு 'ஜெய் பீம்' செல்வது உறுதி: பிரபல அமெரிக்க விமர்சகர் நம்பிக்கை

ஆஸ்கர் இறுதிப் போட்டிக்கு ஜெய் பீம் செல்லும் என பிரபல அமெரிக்க விமர்சகர் ஜாக்குலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 
ஆஸ்கர் இறுதிப் போட்டிக்கு 'ஜெய் பீம்' செல்வது உறுதி: பிரபல அமெரிக்க விமர்சகர் நம்பிக்கை
Published on
Updated on
1 min read

சூர்யா தனது 2டி எண்டர்டெயின்மென்ட் சார்பாக தயாரித்து நடித்த ஜெய் பீம் திரைப்படம் கடந்த வருடம் நவம்பர் மாதம் வெளியாகி விமர்சகர்களின் பெரும் வரவேற்பை பெற்றது. ஞானவேல் எழுதி இயக்கிய இந்தப் படம் பழங்குடியின மக்களுக்கு நடக்கும் துயரங்களை யதார்த்தமாக பதிவு செய்திருந்தது. 

ஓய்வுபெற்ற நீதிபதி சந்துருவின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட உருவான இந்தப் படத்தில் சூர்யா அவரது வேடத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ், குரு சோமசுந்தரம் என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர். இந்தப் படத்துக்கு எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்ய, ஷான் ரோல்டன் இசையமைத்திருந்தார். 

இந்தப் படம் உலக அளவில் திரைப்படங்களை மதிப்பிடும் ஐஎம்டிபி தளத்தில் ஷஷாங்க் ரிடம்சன் படத்தை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்தது. ஆஸ்கர் யூடியூப் பக்கத்தில் இடம்பெற்ற முதல் தமிழ் படம் என்ற சாதனையை ஜெய் பீம் பெற்றது. மேலும் ஆஸ்கர் போட்டிக்கு பரிந்துரைக்கப்பட்ட 276 படங்களில் ஜெய் பீம் திரைப்படமும் இடம் பிடித்தது. 

கைல் என்ற பத்திரிகையாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆஸ்கர் பிரந்துரைக்கப்படும் படங்களில் எந்தப் படம் உங்களின் கவனத்தை ஈர்க்கும் என்று கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு ராட்டன் டொமேட்டோஸ் என்ற இணையதளத்தின் விமர்சகர் ஜாக்குலின் என்பவர் ஜெய் பீம் இடம் பிடிக்கும். என்னை நம்புங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். 

இந்த நிலையில் இறுதிப்போட்டிக்கான நாமினேஷன் பட்டியலில் நாளை (பிப்ரவரி 9) வெளியாகவுள்ளது. இந்தப் பட்டியலில் ஜெய் பீம் இடம்பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளதாக ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com