
நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா ஆபாச பட வழக்கில் கடந்த வருடம் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார். இவரது விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ராஜ் குந்த்ராவிற்கும் ஷில்பா ஷெட்டிக்கும் கருத்து வேறுபாடு நிலவி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இருவரும் விவாகரத்து செய்யவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இதுபற்றி இருவரும் தெரிவிக்கவில்லை.
நடிகை ஷில்பா ஷெட்டி தமிழில் பிரபு தேவாவுடன் இணைந்து மிஸ்டர் ரோமியோ படத்தில் நடித்திருந்தார். மேலும் குஷி படத்தில் விஜய்யுடன் ஒரு பாடலுக்கு நடனமாடியதன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர். ராஜ் குந்த்ராவிற்கும் ஷில்பா ஷெட்டிக்கும் கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
முன்னதாக சமந்தா, தனுஷ், இசையமைப்பாளர் இமான் உள்ளிட்டோரின் விவகாரத்து செய்திகள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.