சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' டீசர் வெளியானது
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் பட டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் டீசரில் அனல் பறக்கும் சண்டை காட்சிகள், டி.இமானின் பின்னணி இசை ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளது.
பாண்டிராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்துக்கு ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தில் பிரியங்கா மோகன் நாயகியாக நடிக்க, வினய் வில்லனாக நடித்துள்ளார்.
இதையும் படிக்க | 19 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் பிரசன்னா - கனிகா
மேலும் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படம் வருகிற மார்ச் 10 ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட இடைவேளைக்கு பிறகு சூர்யாவின் படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

