'அந்தப் படத்துல நான் நடிச்சிருக்கவே கூடாது' -  ஸ்ருதி ஹாசன் அதிரடி

'அந்தப் படத்துல நான் நடிச்சிருக்கவே கூடாது' - ஸ்ருதி ஹாசன் அதிரடி

அந்தப் படத்தில் தான் நடித்திருக்கக்கூடாது என ஸ்ருதி ஹாசன் தெரிவித்தது ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது. 
Published on

கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதி ஹாசன் பாடகர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முக திறன் கொண்டவர். அஜித், விஜய், சூர்யா என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். தெலுஹ்கிலும் ஏராளமான படங்களில் நடித்திருந்தார். 

இந்த நிலையில் மலையாள படமான பிரேமம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சாய் பல்லவி வேடத்தில் ஸ்ருதி ஹாசன் நடித்திருந்தார். அந்த வேடத்துக்கு அவர் பொருந்தவில்லை என ரசிகர்கள் விமர்சித்தனர். மேலும் ரசிகரகளின் கிண்டலுக்கும் ஆளானார். 

இந்த நிலையில் பெஸ்ட் செல்லர் என்ற ஹிந்தி இணையத் தொடரில் ஸ்ருதி ஹாசன் நடித்திருந்தார். இந்தத் தொடர் அமேசான் ஓடிடி தளத்தில் சமீபத்தில் வெளியானது. இந்தத் தொடர் குறித்து அவர் அளித்த பேட்டியில் பிரேமம் படத்தில் தனக்கு கிடைத்த விமர்சனம் குறித்து தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவரது பதிவில், எனக்கு தெரிந்தவரை நான் முதன்முறையாக ரசிகர்களால் கிண்டல் செய்யப்பட்ட தருணம் அதுதான். மலையாள பிரேமம் திரைப்படம் அனைவராலும் விரும்பப்பட்ட படம். குறிப்பாக அந்தப் படத்தில் சாய் பல்லவி வேடம் அனைவருக்கும் பிடித்திருந்தது. முதலில் நான் அந்தப் படத்தில் நடித்திருக்கக்கூடாது என்று நினைத்தேன். 

ஆனாலும் நான் என் பாணியில் அந்த வேடத்தை கையாள நினைத்தேன். அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது முக்கியமல்ல. எனக்கு மலையாள பிரேமம் பிடித்திருந்தது. ஆனால் சாய் பல்லவி போன்று செய்யக் கூடாது என்று நினைத்தேன். காரணம் அவர் போன்று என்னால் நடிக்க முடியாது. எனக்கு அந்தப் படத்தில் நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது. நல்ல வேளையாக அந்தப் படம் பெரும் வெற்றிபெற்றது. கடவுளுக்கு நன்றி. என்று தெரிவித்துள்ளார். 

ஸ்ருதி ஹாசன் தற்போது பிரபாஸுடன் இணைந்து சலார் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை கேஜிஎஃப் பட இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கி வருகிறார். இந்தப் படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com