

சித்ரங்கடா சிங் என்ற ஹிந்தி நடிகை தனக்கு கோ ஃபர்ஸ்ட் என்ற விமானத்தில் நடந்த மோசமான அனுபவங்களை தனது இன்ஸ்டாகிராமில் பிகிர்ந்துள்ளார்.
அவரது பதிவில்,''கோஏர் விமான எண் 391 என்ற விமானத்தில் தில்லியிருந்து மும்பைக்கு சென்றேன். மிகவும் கோவமான, மோசமான பணிப்பெண்ணை சந்தித்தேன். சில பெயர்களைக் குறிப்பிட்டு நல்ல பழக்கங்களைக் கற்றுக்கொடுங்கள்.
அந்த பணியாளர் மிகவும் திமிருடன் நடந்துகொண்டார். விமான பணியாளர்கள் அனைவரது செயல்களும் ஏமாற்றமளித்தது. இதற்கு முன் ஏர் இந்தியாவிலும் இதுபோன்று நடந்தது என்று குறிப்பிட்டிருந்தார்.
அவரது மற்றொருபதிவில், இந்த சம்பவம் என்னருகில் இருப்பவருக்கு நடந்தது. என் அருகில் இருந்தவர் விமான பணிப்பெண்களால் மோசமாக நடத்தப்பட்டார். இத்தனைக்கு அந்த நபர் கண்ணியமாக இருந்தார். அந்த ஊழியர் மிகுந்த ஆணவத்தோடு நடந்துகொண்டார்'' என்று தெரிவித்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.