திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனைகனடா பிரதமா் இன்று இந்தியா வருகை :பிரதமா் மோடியுடன் பேச்சு நடத்துகிறாா்சென்னை பல்கலை. பட்டப்படிப்பு தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுசட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை2026-27 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி 7.2% வரை உயரும் : ‘இஒய்’ நிறுவனம் கணிப்புகடலோர, மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
/

12 நாள்களில் 100 மில்லியன் பார்வையாளர்கள்: பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடல் சாதனை

பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடல் வெளியான 12 நாட்களிலேயே 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 8:31 am

DIN

பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடல் வெளியான 12 நாட்களிலேயே 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

மாஸ்டர் திரைப்படத்துக்கு பிறகு விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் பீஸ்ட். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். நெல்சன் இயக்கியுள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவம் தயாரித்து வருகிறது. படம் ஏப்ரல் 14 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. 

கடந்த பிப்.14ஆம் தேதி காதலர் தினத்தன்று பீஸ்ட் படத்தில் இருந்து அரபிக் குத்து பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்பாடல் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் பிரபலங்கள் மத்தியிலும் பாடலுக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. சமந்தா உள்ளிட்டோர் அரபிக் குத்து பாடலுக்கு நடனம் ஆடி இணையதளங்களில் விடியோ பகிர்ந்துள்ளனர். 

இந்த நிலையில் அரபிக் குத்து பாடல் வெளியான 12 நாட்களிலேயே 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் ரவுடி பேபி பாடல் 18 நாட்களில் இந்த சாதனையை படைத்தது. தற்போது அந்த சாதனையை அரபிக் குத்து பாடல் முறியடித்துள்ளது. இந்த சாதனையை விஜய் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து இணையதளங்களில் கொண்டாடி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.