
தனுஷும் ஐஸ்வர்யாவும் பிரிவதையடுத்து ரசிகர்கள் தங்களது வருத்தங்களைப் பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் ரசிகர் ஒருவர் லக்ஷ்மி ராமகிருஷ்ணனை குறிப்பிட்டு இதற்கு கருத்து சொல்ல மாட்டீர்களா என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு பதிலளித்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன், ''இரண்டு பேரும் மரியாதையுடன் பிரிகிறார்கள். அவர்களுக்கு இருவரும் முறைப்படி பெறும் யாரையும் காதலிக்காமல் பிரிகிறார்கள் அவர்களை விட்டுவிடுங்கள்'' என்று பதிலளித்துள்ளார்.
தனுஷ் - ஐஸ்வர்யாவின் பிரிவு குறித்து கஸ்தூரி ராஜா பேசியுள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது. அந்தத் தகவலில் இருவரையும் அழைத்து தான் பேசியதாகவும் இருவரும் இன்னும் விவாகரத்து செய்துகொள்ளவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.