
சின்னத்திரை தொடர்கள் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ராஜு ஜெயமோகன். குறிப்பாக கனா காணும் காலங்கள் தொடர் இவரை ரசிகர்களிடையே பிரபலப்படுத்தியது. நட்புனா என்னனு தெரியுமா படத்தில் கவினுடன் நடித்திருந்தார்.
மேலும் சரவணன் மீனாட்சி, ஆண்டாள் அழகர் உள்ளிட்ட தொடர்களில் இவர் நடித்துள்ளார். இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் தனது இயல்பான நடவடிக்கைகளால் பிக்பாஸ் வீட்டை கலகலப்பாக்கினார். துவக்கம் முதலே பெரும்பாலானோர் ராஜு தான் டைட்டில் வின்னர் என்பதை கணிக்கத் துவங்கினார்.
இந்த நிலையில் பிக்பாஸ் போட்டியில் வெற்றி பெற்ற அவருக்கு பிரபலங்களிடம் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. ராஜு இயக்குநர்கள் பாக்யராஜ் மற்றும் நெல்சன் திலிப்குமாரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்திருந்தார். இந்த நிலையில் இருவரிடமும் பிக்பாஸ் விருதை அளித்து ஆசி பெற்ற படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.