அதிகாரிகளை தாக்க சதி திட்டம்: நடிகர் திலீப்பிடம் இரண்டாவது நாளாக விசாரணை

அதிகாரிகளை தாக்க சதி திட்டம்: நடிகர் திலீப்பிடம் இரண்டாவது நாளாக விசாரணை

அதிகாரிகளை தாக்க சதி திட்டம் தீட்டியதாக கூறப்படும் வழக்கில்  நடிகர் திலீப்பிடம் இரண்டாவது நாளாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
Published on

நடிகையை பாலியல் துன்புறுத்துதலுக்குள்ளாக்கிய வழக்கில் விசாரணை அதிகாரிகளைத் தாக்கியதாக எழுந்த புகாரில் நடிகர் திலீப்பிடம் இரண்டாவது நாளாக காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். 

மலையாள நடிகர் தலீப், அவரது சகோதரர் அனூப், உறவினர் சூரஜ், நபர் கிருஷ்ணதாஸ் ஆகியோரை விசாரணை அதிகாரிகளை தாக்க திட்டமிட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் கேரள குற்றப் பிரிவு காவல்துறையினர் இரண்டாவது நாளாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

முன்னதாக  திலீப் பேசிய ஆடியோவையும் நீதிபதிகள் முன்பு சமர்பிக்கப்பட்டது. விசாரணை அதிகாரிகளை தாக்குவதற்காக திலீப்பும் அவரது நண்பர்களும் ரூ.1.5 கோடி செலவிட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து தான் கைது செய்யப்படுவதை தடுக்க கேரள உயர்நீதிமன்றத்தில் நடிகர் திலீப் பிணை கேட்டிருந்தார். அவருக்கு விசாரணை அதிகாரிகள் முன்பு தவறாமல் ஆஜராக வேண்டும் இல்லையென்றால் பிணை தள்ளுபடி செய்யப்படும் என்ற எச்சரிக்கையுடன் பிணை வழங்கப்பட்டது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com